Wednesday 31 March 2010

கண்ணாடி ஓவியம்

இதற்குத்தேவையான பொருள்கள்:


கண்னாடியில் வரையக்கூடிய பல வண்ணங்கள்
கருப்பு லைனர்
தங்க நிற லைனர்
வெள்ளி நிற லைனர்
மெல்லியதும் கூர்மையான ப்ரஷ்-2
சிறிது பட்டையடிக்கக்கூடிய ப்ரஷ்-2
வணங்களைக் கலக்க சிறு பாலெட்
ஒரு அழகான ஓவியம் ட்ரேஸிங் பேப்பரில் வரைந்தது

கருப்பு கார்ட்போர்ட் ஷீட்-1
தேவையான அளவில் கண்ணாடி ஒன்று
வரையும் முறை:
கருப்பு கார்ட்போர்ட் ஷீட்டை ஒரு பேப்பரின் மீது விரித்து அதன் மேல் ஒவியத்தை சீராக வைக்கவும்.
அதன் மீது கண்ணாடியை சரியான முறையில் வைக்கவும்.
கருப்பு லைனைரை எடுத்து ஓவியத்தின் அனைத்துக்கோடுகளையும் கண்ணாடியில் மெல்லியதாக வரையவும்.
அரை மணி நேரம் காய விடவும்.
வெள்ளை வண்ணத்தை மீடியமாக வைத்துக்கொண்டு அனைத்துக் வண்ணங்களிலும் ஷேட்ஸ் கொடுக்க முடியும். அதுபோல கற்பனைக்கேற்ப எல்லா இடங்களிலும் வண்ணம் தீட்டவும்.

தங்க நிற லைனராலும் வெள்ளி நிற லைனராலும் மின்னும் உடைகளையும் நகைகளையும் அழகாக வரைய முடியும். நம் கறபனைக்கேற்ப தீட்டும் வண்ணக்கலவைகள் அழகான ஓவியத்திற்கு மேலும் மெருகூட்டும்.

5 comments:

இமா க்றிஸ் said...

உங்கள் ஓவியங்கள் எல்லாமே அழகு. ;)

மனோ சாமிநாதன் said...

உங்களின் அன்பு பாராட்டு என்னை நெகிழ வைக்கிறது. என் அன்பு நன்றி இமா!!

Nithu Bala said...

Arumayana padam..

மனோ சாமிநாதன் said...

அன்பான பதிவிற்கும் பாராட்டிற்கும் என் அன்பு நன்றி, நீது பாலா!

Thenmozhy said...

andha otrai karuppu ooviyathirkum azhagu vannam theeti irukalamae.....

Ungal thoorigaikkaga engi nirkum pennai vanna kolathil mukki edungalen....