Sunday 19 May 2013

வீட்டுக்குறிப்புகள்!!!

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதற்கேற்ப, சின்னச் சின்ன வீட்டுக்குறிப்புகள் சில சமயங்களில் பெரிய அளவில் பலனைக்கொடுக்கிறது.

பல வருடங்களுக்கு முன், என் வலது கை ஆள்காட்டி விரலில் ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. ஃப்ரீஸரிலிருந்து மீனை எடுத்து சுத்தம் செய்து கொண்டிருந்த போது, பக்கவாட்டிலிருந்த பெரிய முள் ஒன்று சரேலென்று விரலினுள் நுழைந்து அடுத்த பக்கத்தில் வெளி வந்து நின்றது. வலியில் துடிதுடித்து உடனேயே மருத்துவரிடம் சென்றதில் அவர் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என்றார். அடுத்த சில மணி நேரங்களிலேயே முள் முழுவதுமாக விரலினுள் சென்று விட்டதால், இன்னொரு மருத்துவரோ, ' ' குத்தி வெளியில் வந்து விழுந்திருக்கும், நீங்கள் உள்ளேயே இருப்பதாக கற்பனை செய்கிறீர்கள்’ என்றார். அடுத்த மருத்துவர் ‘அறுவை சிகிச்சை செய்தால் முள்ளும் வெண்மை, நரம்புகளும் வெண்மை என்பதால் நரம்புகள் ஏதேனும் அறுபட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி ஒரு திரவத்தை ‌ கொடுத்து அதை தினமும் தடவி வந்தால் நாளடைவில் முள் உள்ளுக்குள்ளேயே கரைந்து போய் விடும் என்றார். அந்த சமயம் ஊரிலிருந்து என் சினேகிதி ஒருத்தர் ‘சிறிது அரிசி மாவை மஞ்சள் தூள், சிறிது நல்லெண்ணெய் கலந்து பசை போல ‌காய்ச்சி பொறுத்துக்கொள்கிற சூட்டில் குத்திய இடத்தில் வைத்து ஒரு துணியால் அதன் மீது தினமும் கட்டி வந்தால் முள் வெளியே வந்து விடும்’ என்று எழுதியிருந்தார். அந்த கை வைத்தியத்தை தினமும் செய்து வர, அடுத்த நான்காம் மாதத்தொடக்கத்தில் முள்ளின் ஒரு பகுதி குத்திய பக்கத்திலிருந்தும் எட்டாம் மாதம் முள்ளின் அடுத்த பகுதி அடுத்த துவாரத்திலிருந்தும் வெளியே வந்தது. கை வைத்தியத்தின் பெருமை அப்போது முழுமையாக மனதில் பதிந்தது. அது போலவே தான் இந்த சின்னச் சின்ன குறிப்புகள் எதிர்பாராத சமயங்களில் பெரிய உதவிகளாய் கை கொடுக்கும்!!

இனி வீட்டுக்குறிப்புகள் சில!

1. பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து காணப்படும். இதைத்  தவிர்க்க அதனுடன் எட்டு முதல் 10 துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து வைத்தால் உறையாமல் இருக்கும்.



2. வேப்பிலை போட்டு ஊற வைத்த நீரை செடிகளுக்கு ஊற்றி வந்தால் செடிகள் பூச்சி அரிப்பு எதுவும் இல்லாமல் இருக்கும்.

3. புதுப்புளி வாங்கி கொஞ்ச நாட்கள் கழித்து கருக்க ஆரம்பித்து விடும். இதை தவிர்க்க புதுப்புளி வாங்கியதும் ஒரு மண் பானையில் கொஞ்சம் புளியைப்போட்டு அதன் மீது கொஞ்சம் கல் உப்பைத்தூவி அதன் மீது மீண்டும் புளியை வைத்து மறுபடியும் உப்பைப்போட்டு இப்படியே புளி, உப்பு என்று மாறி மாறிப்போட்டு மூடி வைத்தால் அடுத்த சீசனுக்கு புளி வாங்கும் வரை கருக்காமல் இருக்கும்.



4. மாம்பூக்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, நெருப்பிலிட்டால் அதன் புகையில் கொசுக்கள் வராது.

5. பிளாஸ்டிக் பாத்திரத்தில், சூடு இல்லாத சாம்பார், ரசம், பொரியலைப் போட்டு வைத்தால் கூட, பிளாஸ்டிக்கில் கரை ஏறும். இதைத் தவிர்க்க, பிளாஸ்டிக் பாத்திரத்தின் உள் பக்கம் முழுவதும் எண்ணெய் தடவி விட்டு, உணவு வகைகளைப் போட்டால் கரை ஏறாது.



6. தேங்காய் மூடிகள் அதிகம் சேர்ந்து விட்டால், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, தேங்காய் மூடிகளை அதில் மூழ்கும்படி வைத்துவிடுங்கள். தினமும் இரண்டு வேளை தண்ணீரை மாற்றினாலே 4 நாட்களானாலும் தேங்காய் கெடாமல் அப்படியே இருக்கும்.

7. சாயம் போகக்கூடிய துணிகளை புதியதாக இருக்கும்போது நேரடியாக தண்ணீரில் நனைக்கக்கூடாது. கல் உப்பு கரைத்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்திருந்து பிறகு வழக்கம்போல துவைத்தால் அதிகப்படியான சாயம் நீங்கி விடும். அடுத்தடுத்து துவைக்கும்போது சாயம் போகாது.
வீட்டு சுவர்களில் விரிசல் இருந்தால் வெள்ளை சிமிண்டுடன் சிறிதளவு பேக்கிங் பெளடரைக்கரைத்து ஊற்றினால் விரிசலே தெரியாதவாறு ஒட்டிக்கொள்ளும்.




8. வாழைக்காயை ஈரமில்லாத பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாகக் கட்டி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காது.

9. இரவு சுண்டலுக்கு ஊறவைக்க மறந்து விட்டால் காலையில் அதை ஹாட்பாக்ஸில் போட்டு வென்னீர் ஊற்றி மூடி வைத்தால் 2 மணி நேரத்தில் நன்கு பெரிதாக ஊறி விடும்.
 

33 comments:

கவியாழி said...

பயனுள்ள தகவல்கள் சொல்லியமைக்குப் பாராட்டுக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான பயனுள்ள குறிப்புகள். பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பயன்தரும் வீட்டுக்குறிப்புகள்... நன்றி... முதலில் புளி விசயம் வீட்டில் சொல்ல வேண்டும்...!

மகேந்திரன் said...

மிகவும் உபயோகமான
நல்ல பகிர்வுகள் அம்மா...

இளமதி said...

மனோ அக்கா... நல்ல நல்ல குறிப்புகள் அக்கா. அத்தனையும் முத்துக்கள்!!!
ஆனாலும் முதல்ல நீங்க சொன்ன கையில ஏறிய மீன்முள்ளு சமாச்சாரம் அறிஞ்சதும் எனக்கு நெஞ்சுக்குள்ளேயே முள்ளுக்குத்திடிச்சு...

கடவுளே!!! சும்மா இல்லை 8 மாசமா முள்ளை சுமந்து வெளியில விட்டிருக்கீங்க. வேண்டுதல் பிரார்த்தனை மாதிரி...;). ஊரில் இருக்கும்போது கை கால்ல எதேச்சையா ஏதும் முள்ளு குத்தீட்டாலே வீட்டை உண்டு இல்லேன்னு ரண்டுபடுத்திடுவேன் நான்...:))). அவ்வளவு பயம்...

நல்ல பதிவும் பகிர்வும். மிக்க நன்றி அக்கா!!!

இமா க்றிஸ் said...

உபயோகமான பகிர்வு அக்கா.

கோமதி அரசு said...

பய்னுள்ள வீட்டுக்குறிப்புகள்.
பகிர்வுக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

பயனுள்ள பகிர்வு

VijiParthiban said...

8 மாதங்கள் எப்படித்தான் அதை தாங்கி கொண்டீர்களோ எனக்கு இப்ப நினைத்தாலே சிலிர்க்கிறது....

அருமையான குறிப்பு... வீட்டுக்குறிப்புகள் அனைத்தும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியது ... நல்ல பயனுள்ள தகவல்கள் அம்மா... நன்றி அம்மா....



VijiParthiban said...

8 மாதங்கள் எப்படித்தான் அதை தாங்கி கொண்டீர்களோ எனக்கு இப்ப நினைத்தாலே சிலிர்க்கிறது அம்மா....

ezhil said...

ரொம்ப நல்ல விசயம்தாங்க ...இந்த வேப்பிலைக்கு எங்கே போவது?

ஸாதிகா said...

குறித்துக்கொள்ளவேண்டிய குறிப்புகள்.அதிலும் புளி வருடத்திற்கான அளவில் வாங்கி வைத்து நாளடைவில் கருத்துப்போய் வீணாகி விடுகிறது.மிக உபயோகமான குறிப்பு.

கே. பி. ஜனா... said...

ஆஹா! அட்டகாசமான குறிப்புகள்!குறிப்பாக கொசு, வேப்பிலை பற்றியவை.

RajalakshmiParamasivam said...

மிகவும் நல்ல பயனுள்ள குறிப்புகள்.
பகிர்விற்கு நன்றி.
அதுவும் தேங்காய் எண்ணெய் உறையாமலிருக்க சொல்லியிருக்கும் குறிப்பு எழுதி வைத்துக் கொண்டேன்.
நன்றி பகிர்விற்கு.

Menaga Sathia said...

8 மாதங்கள் எப்படிதான் வலியை பொறுத்துக் கொண்டிர்களோ,பயமாக இருந்தது படிக்கும் போது..அனைத்தும் உபயோகமான குறிப்புகள் அம்மா!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு ந‌ன்றி சகோதரர் கண்ணதாசன்!

மனோ சாமிநாதன் said...

அன்பார்ந்த கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு ந‌ன்றி சகோதரர் தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி மகேந்திரன்!

மனோ சாமிநாதன் said...

என் வேதனையை உங்கள் வேத‌னையாக நினைத்து எழுதிய உங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றி இளமதி! அந்த 8 மாதங்கள் வலி அதிக‌மாகத்தான் இருந்தது. வலது கையினால் வேலைக‌ளைச் செய்ய மிகவும் கஷ்டமாகப்போயிற்று. எப்படி சமாளித்தேன் என்று எப்போது நினைத்தாலும் எனக்கு பிரமிப்பாகத்தான் இருக்கும்!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்கள் கழித்து வருகை தந்து, பாராட்டி கருத்துரை அளித்ததற்கு அன்பு நன்றி இமா!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கோமதி!

மனோ சாமிநாதன் said...

அன்பான‌ ம‌றுமொழிக்கும் பாராட்டிற்கும் இனிய‌ ந‌ன்றி விஜி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு ம‌ன‌மார்ந்த‌‌ ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் ஜெய‌க்குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி எழில்! உங்கள் ஊரில் வேப்பிலை கிடைக்காதா? இங்கே பாலைவனத்தில் கூட வேப்பிலை கிடைக்கிறது!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டுரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜனா! கொசுவை விரட்ட நானும் இந்தக் குறிப்பை ஊரில் இருக்கும்போது அதிகம் பயன்படுத்துவதுண்டு!

மனோ சாமிநாதன் said...

வ‌ருகைக்கும் அன்பான‌ பின்னூட்ட‌த்திற்கும் இனிய‌ ந‌ன்றி ராஜ‌ல‌க்ஷ்மி! தேங்காய் எண்ணெய் குறிப்பு நானும் குளிர் கால‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து தான்!

மனோ சாமிநாதன் said...

உங்க‌ள் அன்பிற்கும் ப‌ரிவிற்கும் இனிய‌ க‌ருத்துரைக்கும் ம‌ன‌மார்ன்த‌ ந‌ன்றி மேன‌கா!

நிலாமகள் said...

அந்த மீன் முள் குத்திய சம்பவத்தை உங்களிடம் நேரில் கேட்ட போதே பயங்கரமாக உணர்ந்தேன். அனுபவ வைத்தியம் எப்போதுமே நல்ல பலன் தான்!!

எல்லா குறிப்புகளையுமே ஓரிரு முறை நினைவில் வைத்து செய்து விட்டால் காலத்துக்கும் மறக்காது. நாமும் நாலு பேருக்கு சொல்லலாம்.

தேங்காய் எண்ணெய் உறையாமலிருக்க நாங்கள் நல்லெண்ணெய் சில சொட்டு விடுவோம்.

மாம்பூக்களைப் போல் வேப்பம் பூக்களை புகை போட்டாலும் கொசு குறையும்.

ஐந்தாவது குறிப்பு எனக்கு புதிது. செய்து பார்க்கலாம்.

தேங்காய் மூடி குறிப்பில் தண்ணீர் மாற்றாமல் ஃ ப்ரிஜில் வைத்திருக்கிறேன். நீங்கள் சொல்வது வெளியிலேயே வைத்து பலன் தரும் போல.

ஹாட் பாக்ஸில் நாங்க வெதுவெதுப்பான பாலும் புரை ஊற்றுவது உண்டு. விரைவில் உறையும். கெட்டியாகவும் இருக்கும்.

ஸ்ரீராம். said...

எல்லாமே உபயோகமான தகவல்கள். வேப்பம்பூ, வேப்ப இலைகளை வைத்தும் கொசுக்களை விரட்டுவார்கள்.

மாதேவி said...

நல்ல குறிப்புகள்.

Anonymous said...

super ideas.
Thank you.
Vetha.Elangathilakam.